உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் கார் மீது மோதி அடுத்தடுத்து விபத்து நிகழ்ந்தது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின் விபத்து குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து காட்சிகள் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவியில் பதிவான நிலையில் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.