சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று நெட்டிசன்களை ஒருபுறம் சிரிக்க வைத்தாலும் மறுபுறம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓர் ஆற்றோரத்தில் நண்பர்களுடன் குளித்துவிட்டு ஓய்வை அனுபவித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது அருகிலிருந்த மரக்கிளைகளில் இருந்து பாம்பு திடீரென தாக்கியது. அந்த நொடியில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து தனது உயிரை காப்பாற்றியுள்ளார்.

“>

 

இந்த வீடியோவில், ஒரு குழுவினர் ஆற்றின் ஓரத்தில் அமர்ந்து குளிர்ச்சியான சூழலில் எதார்த்தமாக பேசிக்கொண்டு இருப்பது காணப்படுகிறது. அதே நேரத்தில், அந்த இளைஞர் அருகே இருந்த புதர்களில் இருந்து ஒரு பெரிய மலைப்பாம்பு மெதுவாகச் சென்று அவரை தாக்க முயற்சி செய்கிறது.

ஆனாலும் அந்த இளைஞர் அதனை உணர்ந்து துரிதமாக எழுந்து ஒடுவதால் உயிர் தப்புகிறார். பின், அங்கு இருந்த மற்ற நண்பர்கள் அனைவரும் வேகமாக ஓடிச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு கீழே நெட்டிசன்களின் புலம்பல் மற்றும் நக்கலான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஒருவர் “என் வாழ்நாள் பயம் இன்னைக்கு யதார்த்தமா நடந்துருச்சு” என எழுதியுள்ளார்.

மற்றொருவர் “அவன் கழுத்துக்கு மேலே மரணத்தின் மூச்சை உணர்ந்தார் போல” என எழுதியிருக்கிறார். மேலும் ஒருவர் “அவன் லக்கி.. இது ஒரு முடிவாக முடியல” என குறிப்பிட்டுள்ளார். ஒரு நெட்டிசன் செம்ம காமெடியா, “கருப்பு சட்டைய போட்டவனுக்கு பாம்பு பிடிச்சுடுமோன்னு பின்னால திரும்பத் திரும்ப பார்த்துட்டே இருந்தாரு” என எழுதியுள்ளார்.