
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு கேனல் பேங்க் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி (25). இவரது 2ஆவது கணவர் ஆண்டனி. அவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரம்ஜான் பீவி தனது முதல் கணவரை பிரிந்து 2ஆவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரம்ஜான் பீவி தனது கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக வியாசர்பாடி மூர்த்திங்கன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து நேற்று மாலை கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைத்து வர ஆண்டனி ரம்ஜான் பீவியின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்த ரம்ஜான் பீவி அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரம்ஜான் பீவியை அவரது உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் ரம்ஜான் பீவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் ககுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.