இந்திய அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான திலீப் தோஷி (77) நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் 33 டெஸ்ட் போட்டிகளில் 114 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 ஒரு நாள் போட்டிகளில் 3.6 என்ற எகனாமி ரேட்டில் 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோன்று இவர் முதல் தர கிரிக்கெட்டில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி உள்ளார்.

கடந்த 1979-1993 இடையில் இந்தியாவுக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 114 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டியில் 22 விக்கெட் களையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நேற்று இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.