
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறியது. இந்நிலையில் யானைகள் காரப்பள்ளம் செல்லும் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டனர். அங்கும் இங்கும் உலா வந்த யானை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, அடிக்கடி யானைகள் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.