பீகாரில் சஹர்சா மாவட்டத்தில் 14 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன்னுடைய ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் அந்தப் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி உள்ளனர்.

பின்பு 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்தச் சிறுமையை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக காரில் இசையின் சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர்.

அதன் பிறகு அந்த சிறுமியை சாலையின் ஓரத்தில் விட்டு சென்றனர். பின் வீடு திரும்பிய அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் எதுவும் கூறவில்லை. அந்தச் சிறுமியின் அத்தை குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பணம் கொடுத்ததாகவும், சிறுமியின் திருமணத்திற்கு தாங்களே பணம் செலுத்துவதாகவும் கூறியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.