
திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு, இது நமக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் 1957 க்கு முன்னாள் நம்முடைய நேரு அவர்கள் கட்டிக் காத்துக் கொண்டிருந்த திருச்சி ,மாவட்டத்தில் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநில மாநாட்டிலே தான் நம் எல்லாம் கட்டிக்காத்த அறிஞர் அண்ணா அவர்கள் நாம் தேர்தலில் போட்டியிட வேண்டுமா ? வேண்டாமா ? என்பதற்காக பெட்டி வைத்து…..
அந்த பெட்டியிலே மாநாட்டிற்கு வந்திருக்கின்ற அத்தனை பேரும் ஓட்டு போட வேண்டும் என்று கேட்டேதன் விளைவாக… அவர்கள் ஓட்டு போட்டு, இறுதியாக கழகம் தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு இணங்க 1957இல் முதன் முதலாக தேர்தலில் நின்றோம். தேர்தலில் நின்றதன் விளைவாக… 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள், இரண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற்றோம்.
அந்த நேரத்தில் நாம் கையாண்டு முறைகள்… குறிப்பாக அன்பு தலைவர் கலைஞர் அவர்கள் கையாண்ட வார்த்தைஜாலங்கள்… நாட்டு நடப்பை ஓரிரு வரிகளில் தெரிவித்து…. அந்த வரிகளுக்காக வாக்களித்த தமிழகத்து மக்களை நாம் சிந்தித்துப் பார்க்கிறோம். கும்பி எரிகிறது, குடல் கருகுது கோளேந்திகளே உங்களுக்கு குளு குளு வாசம் ஒரு கேடா ? என்று காங்கிரஸ் ஆட்சியாளரை பார்த்து அன்றைக்கு ஊட்டியில் தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சியை நடத்திய காங்கிரஸ் காரர்களை பார்த்து அன்றைக்கே தேர்தலிலே கையாண்ட வார்த்தை ஜாலத்தை நாம் பார்த்தோம்.
கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிப்பட்டு செத்தான் அத்தான் என்று மனைவி கதறி அழுகின்ற நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை காட்டூனாக போட்டு, எங்கு பார்த்தாலும் கலைஞர் அவர்கள் ஓட்டச் செய்தார்கள். கலைஞர் கையாண்ட விதத்தை எண்ணி பாருங்கள்… ஒரே வரியில் இந்த நாட்டு மக்கள் மக்களுடைய எண்ணத்தில்… உள்ளத்திலே…. நம்முடைய தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய பெரும் மகன் அன்பு தலைவன் கலைஞர் அவர்கள்…..
அன்றைக்கு திருச்சிக்கு பக்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்து….. அரியலூரில் அருகிலே நடந்த ரயில் விபத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்தார்கள்…. அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா ? மக்கள் மாண்டது போதாதா ? என்று கேள்வி கணங்களை தொடுத்தார்கள்.. அழகேசன் அவர்கள் அன்றைக்கு ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து கேட்ட கேள்வி அண்ணன் கலைஞர் அவர்கள் தொடுத்த வினா. காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் ஆட்சி நிலைக்காது என்று எல்லாம் தலைவர் கலைஞருடைய வசனங்கள், வசனத்துளிகள்….
இந்த நாட்டினுடைய வாக்காளர்களை அன்று வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது, உங்களுக்கு தெரியும்…. அந்த காங்கிரஸ் ஆட்சியை கூண்டோடு தூக்கி எரிந்தது, நம்முடைய அன்பு தலைவர் கலைஞர் அவர்களுடைய சாதாரண வார்த்தைகள். அந்த வார்த்தை ஜாலங்கள் 1967இல் மிகப்பெரிய வெற்றி பெற்று… ஒரு அரசாங்கத்தை அமைக்கின்ற அளவிற்கு வலிமை பெற்ற வார்த்தைகளாக அண்ணன் கலைஞர் அவர்களுடைய வாசகங்கள் அமைந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.