
சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார்.
அப்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் அவர் மீது மோதிய நிலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சூரிய நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.