வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் தலைமை செயலகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கை அவரை வரவேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சரின் மு.க ஸ்டாலின்,  அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு ஆகியோர் ஈடுபட்டனர்.

அந்த ஆலோசனையில் கூட்டம் முடிந்த பிறகு தற்போது பல்வேறு துறைகளில் உடைய அமைச்சர்கள்,  அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறைகளுடைய அமைச்சர்கள் இருக்கிறார்கள், தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி, இந்திய கடற்படையின் உடைய அதிகாரிகள் மற்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய   தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.

மீட்பு பணியின் உடைய தற்போது நிலை என்ன ? தமிழகத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன ? அதனை சரி செய்வதற்கு மத்திய அரசினுடைய உதவி எவ்வளவு தேவைப்படுகிறது ?  மீட்பு பணி – மழை வெள்ள பாதிப்பு பணி எப்போது நிறைவடையும்?  உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளனர். அதேபோல மழை  பாதிப்பு எவ்வளவு ? மழையின்  உடைய அளவு எவ்வளவு ? உள்ளிட்டவை தொடர்பாக வானிலை மையம் சார்பிலும் தெரிவிக்கப்பட இருக்கின்றது. மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் அமைச்சர் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் தமிழக முதலமைச்சரும்,  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும் இணைந்து செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தமிழக அரசின் உடைய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பாக செய்யப்பட்டிருக்கிறது.

அதிலே தமிழக அரசும்,  மத்திய அரசும் எந்த மாதிரியான புயல் பாதித்த பகுதிகளுக்கு திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் தெரியவரும். எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ? எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ? என்பது போன்ற முக்கியமான விஷயங்களை இரண்டு தலைவர்களும் இன்னும் சிறிது நேரத்தில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறார்கள்.