திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எதிர்த்தரப்பில் இருப்பது அதிமுக கூட்டணியா? அல்லது பாஜக கூட்டணியா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாஜக தலைவர்கள் அதிமுக பாஜக கூட்டணியை பாஜக கூட்டணி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் கூறுகின்றனர். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருப்பதாக நாம் நம்புகிறோம்.

திமுக தலைமையிலான கூட்டணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயர் உள்ளது. அதிமுக பாஜக கட்சிகள் தான் கூட்டணியில் உள்ளது தவிர பாமக, தேமுதிக ஆகியவை இந்த கூட்டணியில் இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.

கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்ற நிலை வந்தால் விசிக அதில் இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் வீசிக்க அங்கம் வகிக்காது என்று கூறினார். அதிமுகவும் பாஜகவும் இணைந்து பயணிப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திமுக குறைந்த இடங்கள் தந்தாலும் கூட்டணியில் நீடிப்போம் என்று கூறுவது விசிக தொண்டர்களை சோர்வடைய செய்யாது. ஏனெனில் எங்கள் தொண்டர்களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி உள்ளோம். தொகுதிகள் குறித்து கட்சிக்குள் இதுவரை எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது என்றும் கூறினார்.