கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்ட மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 240 பேர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாததால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.