
கோஷ்டி பூசலால் திமுகவுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக உடன்பிறப்புகளின் குமுறல் தலைமை வரை சென்ற நிலையில், திமுகவில் முக்கிய நிர்வாகிகள், கவுன்சிலர், பொருளாளர் என பெரிய படையே (100 பேருக்கு மேல்) இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இன்னும் சிலர் இந்த வாரத்தில் ஐக்கியமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.