
நெல்லையின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி திமுகவிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்த புவனேஸ்வரிக்கு மேயராகும் வாய்ப்பை முன்னாள் CM ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, கடந்த 2021ல் அவர் திமுகவில் இணைந்தார். எனினும், திமுகவில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், இன்று அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில்
இணைந்துள்ளார்.