
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தொடர்கிறது என அமித்ஷா அறிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூற, அது விவாதமாக மாறியது. அதிமுக-பாஜகவினர் மாறி, மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்துள்ள அமித்ஷா, அதிகாரப்பூர்வமாக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.