
மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறுபடை முருகனின் கண்காட்சி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த கண்காட்சிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அந்த கண்காட்சியில் அறுபடை வீடுகளின் கோபுரங்களும், அதில் முருகப்பெருமானின் படமும் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் அண்ணாமலை மீது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகாரின் அடிப்படையில் பாஜக மாநிலம் முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், இந்து முன்னணி நிர்வாகி செல்வகுமார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.