
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது தனது தாயாருடன் சென்ற சீமான் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணத்தையும் வழங்கினார். அஜித்குமார் மரணத்துக்கு நீதி வேண்டி திருப்புவனத்தில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டமும் நடைபெற்றது.