தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளாக ஸ்டன்ட் மாஸ்டராக வேலை பார்த்தவர் கோதண்டராமன். இவர் பல்வேறு திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் கோதண்டராமன் நடித்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரிலீசான கலகலப்பு திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சந்தானத்துடன் இணைந்து பேய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். கலகலப்பு படத்தில் அவரது காமெடி காட்சிகள் இன்றும் சிரிக்க வைக்கும். இந்த நிலையில் சென்னை பெரம்பூரில் இருக்கும் அவரது இல்லத்தில் கோதண்டராமன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.