
பிரபல நடிகரான ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். இந்த நிலையில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். இருவரையும் மனம் விட்டு பேச நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சமரச மையத்தில் இருவரும் ஒரு மணி நேரம் மனம் விட்டு பேசினர். அந்த வழக்கு விசாரணை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.