
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் நாளை முதல் மே 31-ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குன்னூர் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏப்ரல் மே மாதங்களில் மலர் கண்காட்சி உட்பட கோடை விழாக்கள் நடத்த ஏதுவாக தோட்டக்கலை துறை அறிவிப்பை வெளியிட்டது. கோடை கால விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு மலர் கண்காட்சி உட்பட கோடை விழாக்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.