அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது ஒரு நல்ல தீர்ப்பு. மீண்டும் தர்மம் வெல்லும் என்பது இன்று உறுதியாகியிருக்கிறது என கூறியுள்ளார்.