
புதுச்சேரி மாநில பாஜக மைய குழு மேலிட பொறுப்பாளர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று பாஜக மாநில தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல், நாளை தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வாக உள்ளார்.