தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது புதிய டிவி சேனலை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக இன்று பனையூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. அதாவது திமுகவுக்கு கலைஞர் டிவி, அதிமுகவுக்கு நியூஸ் ஜெ என்று தனித்தனியாக நியூஸ் சேனல்கள் இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்காகவும் தனியாக ஒரு நியூஸ் சேனலை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளளாராம்.

இந்த நியூஸ் சேனலுக்கு தமிழ் ஒளி என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நியூஸ் சேனலை அதிகாரபூர்வமாக தொடங்குவது குறித்து கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த முறையான அறிவிப்புகள் பின்னர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.