பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.

விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. தமிழ்நாட்டிற்கு தேவையானதை செய்யும் மத்திய அரசு இருந்திருந்தால் நாம் உலக அளவில் முன்னேறி இருப்போம். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். இதுவரை தரப்படவில்லை என கூறியுள்ளார்.