
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொறடாவாக செயல்பட்டு வந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு ரா.அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் வகையிலும் கட்சிக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு சி.சிவகுமார் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆவணங்களில் இந்த மாற்றத்தை பதிவு செய்து உரிய ஆவணங்களை பிறப்பிக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என சபாநாயகருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.