
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மக்களவையில் கனிமொழி எம்பி மீனவர்களின் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.