
தமிழகத்தில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் 45 கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
அதாவது தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழி கல்வி கொள்கை போன்றவைகள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெற இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளும் கௌரவம் பார்க்காமல் இவன் என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது என்று நினைக்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் கலந்து கொள்ள இருக்கிறாராம். மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.