
விருதுநகர் மாவட்டத்தில் உதவிகள் வழங்கும் விழாவில் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நந்தகுமார் என்பவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு அவருக்கு அருகே அமர்ந்திருந்த பாண்டியராஜனுக்கும் பொன்னாடை அணிவிக்க சென்றார். அப்போது ராஜேந்திர பாலாஜி யார் மாவட்ட செயலாளர் என தெரியாதா? என கேட்டவாறு நந்தகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பல கட்சிகளுக்கு சென்று வந்த பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகியை கன்னத்தில் அறைந்தேன். மாவட்ட செயலாளராக நான் இருக்கும் போது பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா என ஆவேசமாக பேசியுள்ளார்.