நாடு முழுவதும் முதல் 5-ம் முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யப் போவதாக தற்போது மத்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார். இவர் நாடு முழுவதும் இனி 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி அந்த மாணவர்களை பெயிலாக்க கூடாது என்ற சட்டம் இருக்கிறது.

இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு இனி தோல்வியடைந்த மாணவர்களுக்கு 2 மாதங்களில் மறுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறு தேர்விலும் தோல்வியடைந்தால் அவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் மீண்டும் அதே வகுப்பில் தான் படிக்க வேண்டும். மேலும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.