நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் கஸ்தூரி குடிக்க இரண்டு தனி படைகள் அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் கஸ்தூரி கைது செய்வதற்காக இரண்டு தனிப்படை காவலர்களும் சென்னைக்கு விரைந்து சென்றுள்ளனர். தெலுங்கர்கள் குறித்த அவதூறாக பேசிய புகாரில் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.