கல்வி நிதி தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அரசுப் பள்ளியில் படித்து இரு மொழி கொள்கையை பின்பற்றியவர்களே இஸ்ரோ உள்பட அனைத்து உயர் அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர். மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. மீண்டும் ஒரு மொழிப்போரை ஒன்றிய அரசு கொண்டு வந்துவிடக் கூடாது.

புதிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டீர்களா? பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு முன்னேறியுள்ளது. காலில் சங்கிலியை கட்டி ஓட விடாமல் செய்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.