திமுக கட்சியின் பவள விழா தற்போது காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு  மெய்யநாதன்  அதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனித வள மேம்பாட்டு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.