
தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதம் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னை மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ள நிலையில் இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பை அந்தெந்த மாவட்ட ஆட்சியர்களும் வெளியிடுவார்கள். மேலும் அன்றைய தினம் தடையை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்து இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.