
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று மதுரையில் வரலாறு காணாத அளவு 54 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என எச்சரிக்கை எடுத்துள்ளதால் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இன்று வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.