
தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்துள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.