தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திற்கு 520 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 720 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.