
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் நீராடும் மற்றும் உடை மாற்றும் பெண்களை ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த படங்கள் வீடியோக்கள் பகிரப்படும் குரூப்கள் 2000 முதல் 3000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறதாம். மேலும் பேஸ்புக் யூடியூப் தளங்களிலும் தனியே பக்கங்கள் தொடங்கி வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.