வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ₹44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிள்ளார். கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது, பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க நான் விரும்பவில்லை. பெரியார் தான் எங்களுக்கு தலைவர். எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் அவர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தவறுகள் நடைபெறுவதை பூதாகரமாக்கி எதிர் கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டுகின்றன என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.