
ஊரக வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கூறியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியத்தொகை ரூ.2,118 கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களை விட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியுள்ளோம். நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின் ஒன்றிய அரசால் ஊதியம் அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.