
இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் தள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. X வலைதள செயலி மற்றும் பிரவுசர்களில் சேவை பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சுமார் ஒரு மணி நேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இரண்டும் செயல்படவில்லை. சிறிது நேரத்திலேயே எக்ஸ் தளம் மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்த இடையூறுக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.