
சென்னை மாவட்டம் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளாதீர்கள். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.
மக்கள் தொகையில் விழிப்புணர்வுடன் இருக்கும் தமிழ்நாட்டுக்கு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தண்டனை கொடுக்கிறது. முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்காக திட்டங்களை செயல்படுத்தினார். செயல்படுத்த முடியாத திட்டம் என பலரும் தெரிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி காட்டினார். இந்தியாவிலேயே கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் என கூறியுள்ளார்.