
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை மத்திய அரசு திணிக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைகள் தான் பின்பற்றப்படுகிறது. மேலும் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் “இன்பத்திராவிடத்தில் இந்தி மொழியே” என தொடங்கும் பாரதிதாசன் பாடலை மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு..
இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே – நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே – உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் – நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் – உனை
ஒழிப்பதும்… https://t.co/Obeql2bHSq— M.K.Stalin (@mkstalin) February 19, 2025