
அரிட்டாப்பட்டி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அக்கறை திமுக அரசுக்கு இல்லை. டெண்டர் விட்டதும் உடனடியாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். டங்ஸ்டன் திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு 9 மாதம் இந்த அரசு எதுவும் செய்யவில்லை.
மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தனர். விவசாயிகளுக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் அதிமுக குரல் கொடுக்கும். டங்ஸ்டன் போராட்டத்தில் மக்களின் அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.