
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதன் பிறகு பலம் வாய்ந்த திமுக கூட்டணியும் மற்றொருபுறம் களம் காண்கிறது. அதோடு விஜய், சீமான் உள்ளிட்டோர் தனித்தனியாக களம் காணும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தேர்தல் பிரச்சாரம் என தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அதன்படி ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் நிலையில் அரியலூர், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்து சமய அறநிலைத்தறை அதிகாரிகள் மற்றும் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக ஜூலை 26 ஆம் தேதி கேரளாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாட்டு வருகை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.