2026 சட்டமன்ற தேர்தலை  எதிர்கொள்ள  அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கவும் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் இன்று செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.