சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கடைசியாக 1931 ஆம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்பட்டது. ஆனால் அதன் தரவுகள் வெளியிடப்படவில்லை.

2021-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனாவால் தள்ளிப்போன நிலையில் இனி நடத்தப்பட உள்ள அந்த கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்படும் என ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ளது.