
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை அணியை பேட் செய்யுமாறு அழைத்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன் பிரீத் 51 ரன்களும், யஸ்திகா பாட்டியா 44 ரன்களும், நாட் சீவர் 36 ரன்களும் எடுத்தார். இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது.
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்தது. கடைசியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 22 ரன்கள் வரை எடுத்தார். இதனால் மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் இருக்கிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக WPL 2023 பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.