
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அமைப்பின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இந்த மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் பேர் அமர கூடிய வகையில் சிறப்பான அமைப்புகள் செய்யப்பட்டு, இறுதி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாடு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கட்சியின் தலைவர் நடிகர் விஜய், இன்றிரவு மாநாட்டுக்கு கிளம்ப உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது விக்கிரவாண்டிக்கு சென்று விட்டார்.
மேலும் அங்கு கிட்டதட்ட 2 மணி நேரமாக மாநாட்டு திடலில் நடைபெறும் இறுதிக்கட்ட பணிகளை விஜய் கேட்டறிந்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.