
சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை மத்தியாஸ் நகரில் வசிக்கும் தேவதாஸ் தனது மனைவி மற்றும் மகளுடன் பெசன்ட் நகரில் இருக்கும் தேவாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து புகை வந்ததால் தேவதாஸ் பாலத்தின் ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
உடனே அவர்கள் கீழே இறங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.