
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் அமைந்துள்ளது. இதற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் தென்னை, பனை மரங்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மின் கம்பிகள் உரசியதால் தீ விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர் இருப்பினும் தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.