கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இன்ஸ்பெக்டராக ஜெயலக்ஷ்மி மற்றும் தலைமை காவலராக சிவசக்தி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பெண் பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, தலைமை காவலர் சிவசக்தி ஆகியோர் பிடிபட்டனர்.

அதன் பின் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடைபெற்ற வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.